செய்திகள் உலகம்
போக்கிமான் கடையில் இரத்தக் களரி
டோக்கியோ:
கடந்த வியாழக்கிழமை இங்குள்ள ஒரு வணிக வளாகத்தில் போக்கிமான் பொருட்கள் விற்கும் வளாகத்தில் ஒரு பெண் ஊழியர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தச் சம்பவத்தில், தாக்கியவன் என்று சந்தேகிக்கப்படும் நபரும் தன்னையே கத்தியால் குத்திக்கொண்ட பிறகு உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
20-களில் வயதுள்ள பாதிக்கப்பட்டவர், அதே வயதுடைய ஒரு ஆணால் உள்ளூர் நேரம் மாலை 7.16 மணிக்கு கழுத்தில் குத்தப்பட்டதாக டோக்கியோ மெட்ரோபாலிட்டன் போலிஸ் கூறியது.
போலீஸ் செய்தியாளர் கூறியதாவது, இருவரும் ஒரு மணி நேரம் கழித்து மருத்துவமனையில் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது என்று போலிஸ் தரப்பு செய்தியாளர் தெரிவித்தார்.
கடையில் பணிபுரிந்த அந்தப் பெண், இரண்டு கைகளிலும் கத்தியைப் பிடித்திருந்த சந்தேகநபரை எதிர்கொண்டதாக ஆசாஹி தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் கூறினார்.
சம்பவத்திற்கு முன்பு, பாதிக்கப்பட்டவராக நம்பப்படும் ஒருவர் தன்னைக் கண்காணிப்பதாக புகார் அளித்ததாக ஆசாஹி நாளிதழ் தெரிவித்தது.
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், இங்கு மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான இகேபுகுரோ முனையத்திலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள அந்தக் கட்டிடத்தில் ஆம்புலன்ஸ்கள் திரண்ட நேரத்தில் சந்தேகநபர் நிகழ்விடத்திலிருந்து தப்பியோடுவது காட்டப்பட்டது.
அந்த வளாகம் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், பல குழந்தைகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருந்ததாக, அலமாரி விழும் சத்தமும் ஒரு பெண் உதவி கோரி கத்தியதைக் கேட்டதாக நிகழ்விடத்திலிருந்து தப்பியோடிய சாட்சி ஆசாஹியிடம் தெரிவித்தார்.
ஜப்பானில் பிரபலமான அந்த ஃபிரான்சைஸ் பொருட்களை விற்கும் சுமார் 20 கடைகளை நடத்தும் போக்கிமான் கோ, தனது இகேபுகுரோ கிளை, அருகிலுள்ள 'பிக்காச்சு ஸ்விட்ஸ்' கஃபே மேலும் அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று கூறியது.
"போலிஸுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதுடன், ஊழியர்களின் உடல், மன நலனிலும் கவனம் செலுத்துவோம்" என்று நிறுவனம் தன் இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 12:02 pm
ஈரானின் புஷ்ஹேர் அணு மின்நிலையம் மூன்றாவது முறையாக தாக்கப்பட்டது
March 28, 2026, 10:28 am
நவீன வசதிகளுடன் ஒரு சிறிய சொர்க்கம்
March 27, 2026, 5:34 pm
எல்லைகளைக் கடந்த மனிதாபிமானம்: ஓமன் வெள்ளத்தில் இந்தியர்களைக் காப்பாற்றிய பாகிஸ்தான் வீரர்
March 27, 2026, 3:18 pm
ஈரானின் கெஷ்ம் தீவுக்கு அருகே தாய்லாந்து சரக்குக் கப்பலான மயூரி நாரி தாக்கப்பட்டது
March 27, 2026, 11:07 am
சுங்கச்சாவடி அமைப்பு மூலம் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துகிறது ஈரான்
March 27, 2026, 10:38 am
“கழிப்பறை காகிதப் பற்றாக்குறையால் பதற்றம் தேவையில்லை”: மக்களிடம் ஜப்பான் அரசின் வேண்டுகோள்
March 27, 2026, 10:32 am
