நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

"பண்டிகை இருக்கு.. ஆனால் கொண்டாட வழியில்லை": காசாவில் பொலிவிழந்த ஈகைத் திருநாள்

காசா: 

காசாவில் உள்ள பல பாலஸ்தீனியர்கள் ஈகைத் திருநாளைக் கொண்டாட விரும்புகின்றனர், ஆனால் இரண்டு வருடப் போரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அவ்வாறு செய்வதை அவர்களுக்குக் கடினமாக்குகிறது என்று அல் ஜஸீரா தெரிவிக்கிறது.

ஈரான் உடனான போர் தொடங்கியதிலிருந்து கடுமையாக்கப்பட்டுள்ள, காசாவுக்குள் பொருட்கள் நுழைவதற்கான இஸ்ரேலிய முற்றுகை, குழந்தைகளின் பொம்மைகள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளையும் மேலும் உயரச் செய்துள்ளதாக அறியப்படுகிறது.

காசா நகரில் இடிக்கப்பட்ட வீட்டில் வசிக்கும் 62 வயதான குடியிருப்பாளரான கலீத் டீப், ஈகைத் திருநாள் முன்னிட்டு பழங்கள், காய்கறிகளின் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதைப் பார்க்க, நகரின் மையத்தில் உள்ள ரெமால் சந்தைக்குச் சென்றார்.

"வெளியே இருந்து பார்க்கும்போது, ஈகைப் பண்டிகைக் களிப்பு கொண்டாட்டமாகவும் உயிரோட்டமாகவும் தெரிகிறது.

"ஆனால் நிதி ரீதியாக, நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, ஏனெனில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இப்போது கூடாரங்களிலும் தற்காலிக தங்குமிடங்களிலும் வாழ்கின்றனர்," என்று அவர் கூறினார்.

தன்னால் பழங்கள், காய்கறிகளை வாங்க முடியவில்லை என்றும், தன்னை போன்ற 'ஏழைகளும் சோர்வுற்றவர்களும்' அல்ல, 'பணக்காரர்களால்' மட்டுமே அவற்றை வாங்க முடியும் என்றும் கலீத் தெரிவித்தார்.

போருக்கு முன்பு, தனக்கு ஒரு பல்பொருள் அங்காடி கடை இருந்ததாகவும், ஒவ்வொரு ஈகைத் திருநாளின் போதும் தனது மகள்களையும் சகோதரிகளையும் சந்திக்கச் செல்லும்போது அவர்களுக்கு 3,000 ஷெக்கல்களுக்கும் (சுமார் RM3,801) அதிகமாகப் பரிசுகளாகக் கொடுப்பார் என்றும் அவர் கூறினார்.

மேலும், அவர் தன் வீட்டைத் அழகுப்படுத்துவார், தனது குழந்தைகளுக்கு ஈகைத் திருநாள் ஆடைகள் வாங்குவார், மேலும் பண்டிகையைக் கொண்டாட மிட்டாய்கள், சாக்லேட்களைப் பெறுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், காசாவில் போர் நிறுத்தம் இருந்தபோதிலும், இந்த ஈகைப் பண்டிகையில் இவற்றில் எதுவும் நடக்காது.

இதே உணர்வை மூன்று குழந்தைகளின் தாயான ஷரீன் ஷ்ரீமும் வெளிப்படுத்தினார். இரண்டு வருடப் போருக்குப் பிறகு தங்கள் ஈகைப் பண்டிகை மகிழ்ச்சி முழுமையடையவில்லை என்று அவர் கூறினார்.

"மிக அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காத ஒரு வாழ்க்கையை நாங்கள் எதிர்கொள்கிறோம்," என்று அவர் சந்தையில் நடந்து கொண்டே தெரிவித்தார்.

முழுமையாக வெறுமையான சுவர்களைக் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதாக ஷரீன் கூறினார்.

அவரும் அவரது கணவரும் தங்கள் வாழ்க்கையைத் தொடர்வதற்காக கேன்வாஸ்களையும் மரங்களையும் கொண்டு ஒரு தற்காலிக அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

"நீங்கள் பார்ப்பது போல, மக்கள் எந்தவொரு மனிதாபிமான தங்குமிடமும் இல்லாமல் தெருக்களில் நைலான், துணி கூடாரங்களில் வாழ்கின்றனர்; அவர்கள் எவ்வாறு ஈகைத் திருநாளைக் கொண்டாட முடியும்?" என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset