செய்திகள் மலேசியா
"எல்லைகளைக் கடந்த அன்பு": முஸ்லிம் சகோதரர்களுக்கு சரவாக் தேவாலயங்கள் சங்கம் வாழ்த்து
கூச்சிங்:
சரவாக்கில் உள்ள தேவாலயங்கள் சங்கம் (ACS), ஹரி ராயா ஈகைப் பெருநாள் விழாவைக் கொண்டாடும் முஸ்லிம்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் டத்தோ டானல்ட் ஜூட், சரவாக்கிலும் ஒட்டுமொத்த மலேசியாவிலும் கொண்டாடப்படும் ஹரி ராயா, ஒரு சமூகத்திற்கான கொண்டாட்டம் மட்டுமல்ல, உறவுகளை வலுப்படுத்தும் ஒரு பொதுவான நன்றியுணர்வின் தருணம் என்று தெரிவித்தார்.
"நமது தனித்துவமான திறந்த இல்லங்கள் பாரம்பரியம், மதம், இனம் அல்லது சமூகப் பின்னணிகளைப் பொருட்படுத்தாமல் எல்லையைக் கடந்து நிற்கும் ஒரு உணர்வைப் பிரதிபலிக்கிறது – அது அமைதி, நல்லிணக்க உணர்வுடன் ஒன்றாகப் பகிர்ந்துகொள்வதாகும்," என்று அவர் தனது ஹரி ராயா செய்தியில் கூறினார்.
மேலும், பரஸ்பர மரியாதையே ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான அடித்தளம் என்றும், (ஹரி ராயா வாழ்த்தில் "மஃப் ஸஹிர் டான் பத்தின்" என்பதைச் சேர்ப்பதன் மூலம்) மன்னிப்புக் கோரும் பாரம்பரியம், குணப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்திற்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகச் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
"நீங்கள் ஹரி ராயா ஐதீல்ஃபிட்ரி விழாவைக் கொண்டாடும் வேளையில், உங்கள் இல்லங்கள் மகிழ்ச்சியாலும், உங்கள் இதயங்கள் அமைதியாலும் நிரம்புவனவாகப் பிரார்த்திக்கிறோம்," என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 5:46 pm
"மக்களோடு மக்களாக பிரதமர்": புக்கிட் மெர்தாஜாம் வருகையில் உற்சாக வரவேற்பு
March 20, 2026, 5:45 pm
புத்ரா ஜெயா கார் விபத்தில் இருவர் உயிரிழப்பு, நான்கு பேர் படுகாயம்
March 20, 2026, 5:43 pm
சினிமா பாணியில் JPJ-இன் ராயா விளம்பரம்
March 20, 2026, 4:23 pm
"மக்களைத் திசைதிருப்ப வேண்டாம்": சிவமலர் கணபதி
March 20, 2026, 2:40 pm
சவுத்கீ பகுதில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் சிங்கப்பூரில் கைது
March 20, 2026, 2:18 pm
