நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநில தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டு கருத்தரங்கு; மாணவர்கள் சரிவு குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது: நாச்சிமுத்து

ஈப்போ:

பேரா மாநில தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டு கருத்தரங்கில் மாணவர்கள் சரிவு குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது.

பேரா மாநில அமால் மக்மோர் சமூக நல இயக்கத்தின் தலைவர் நாச்சிமுத்து கருப்பண்ணன் கூறினார்.

பேரா மாநில தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டு கருத்தரங்கு இன்று நடைபெற்றது.

பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் வாரியக் குழுவுடன் இணைந்து இக்கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

பேரா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் எதிர்கொள்ளும் சாவால்களை சமாளிப்பது  குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளில் நிலவி வரும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு குறித்து விரிவாக பேசப்பட்டது.

அதே வேளையில் இப்பிரச்சினைக்கு தீர்வுக் காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது என்று அவர் கூறினார்.

மலேசியாவில் அதிகமான குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட தமிழ்ப்பள்ளிகள் பேராவில் தான் உள்ளன.

மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை காக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் வாரியக் குழு தலைவர் தியாகராஜன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset