நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஜெயா கார் விபத்தில் இருவர் உயிரிழப்பு, நான்கு பேர் படுகாயம்

புத்ராஜெயா: 

இன்று பிற்பகல் நடந்த ஒரு பெரும் போக்குவரத்து விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததோடு மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் பிரிசின்ட் 12-இல் உள்ள தாமான் வெட்லேண்ட் பகுதிக்குச் செல்லும் பிரிசின்க்ட் 1-இல் நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து புத்ராஜெயா தீயணைப்பு, மீட்புத் துறைக்கு காலை 11.58 மணிக்கு அவசர அழைப்பு வந்தது.

பிரசின்க்ட் 14 நிலையத்திலிருந்து ஒரு தீயணைப்பு வாகனம், அவசர மருத்துவ மீட்பு சேவை (EMRS) குழு மதியம் 12.07 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

செயல் உதவி இயக்குனர் பிஜிபி எம் ஹாசிக் ஹஸ்மி , சறுக்கி மரத்தில் மோதிய ஒரு புரோட்டான் சாகா காரைக் குழுவினர் கண்டறிந்ததாகத் தெரிவித்தார்.

"விபத்தின் தாக்கத்தால் பல பாதிக்கப்பட்டவர்கள் வாகனத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டனர்," என்று அவர் ஒரு ஃபேஸ்புக் பதிவின் மூலம் கூறினார்.

இந்தச் சம்பவத்தில் மொத்தம் ஆறு பேர் பாதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

மற்ற நான்கு பாதிக்கப்பட்டவர்கள் மேலதிக சிகிச்சைக்காக EMRS வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

தீயணைப்புக் குழு, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அந்த இடத்தைச் சுத்தம் செய்யும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது.

அந்தப் பாதை முற்றிலும் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்வதற்காக, சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மரங்களும் வெட்டப்பட்டன.

அரச மலேசிய காவல்துறை, மலேசிய சிவில் பாதுகாப்புப் படை, சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset