செய்திகள் மலேசியா
பள்ளி மாணவர்களை குண்டர் கும்பலில் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
சிரம்பான்:
பள்ளி மாணவர்களை குண்டர் கும்பலில் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
சிரம்பான் மாவட்ட போலிஸ் தலைவர் அஸஹர் அப்துல் ரஹீம் இதனை கூறினார்.
சிரம்பானில் உள்ள குண்டர் கும்பலில் சேருவதற்காக, பள்ளி மாணவர்களை ஆள்சேர்ப்பவராகச் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
20 வயதான அந்த உள்ளூர் சந்தேக நபர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.10 மணியளவில், சிரம்பானில் உள்ள கார்டன் ஹோம்ஸில் ஒரு உணவகத்தின் முன்பு கைது செய்யப்பட்டார்.
நெகிரி செம்பிலான் போலிஸ் படை தலைமையகத்தின் குற்றம், சூதாட்டம் ஒழுக்கக்கேடு பிரிவு (டி7), சிரம்பான் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் கிளை டி7 ஆகியவற்றால் அவர் கைது செய்யப்பட்டார்.
சோதனையின் முடிவுகளில் அந்த சந்தேக நபருக்கு நான்கு குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவரது கூற்றுப்படி, 1966 ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் பிரிவு 45இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக, அந்த நபர் புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதுவரை, விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் பணியில் போலிஸ் ஈடுபட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 2:40 pm
சவுத்கீ பகுதில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் சிங்கப்பூரில் கைது
March 20, 2026, 2:18 pm
இன்று மாலை பல மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
March 20, 2026, 2:16 pm
முந்திச் சென்றது ஒரு குற்றமா?: பள்ளிவாசலில் இருந்து திரும்பியவரைச் சித்திரவதை செய்த கும்பல்
March 20, 2026, 12:40 pm
அரசாங்க அதிகாரி போல் நடித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் மற்றொரு மலேசியர் கைது
March 20, 2026, 12:38 pm
"பண்டிகை உங்களுக்கு... மரண பயம் அவற்றுக்கா?": பெட்டிகளில் அடைத்து சந்தைகளில் வீசப்படும் பூனைகள்
March 20, 2026, 11:09 am
