நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

"மக்களோடு மக்களாக பிரதமர்": புக்கிட் மெர்தாஜாம் வருகையில் உற்சாக வரவேற்பு

புகிட் மெர்த்தாஜம்: 

பினாங்கிற்கு ஒரு நாள் பணிப் பயணத்தைத் தொடங்கிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கம்போங் பெலெட்டில் உள்ள மஸ்ஜித் ஜாமெக் அஸ்-ஷக்கிரினில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றினார்.

 மதியம் 1.12 மணிக்கு பள்ளிவாசலுக்கு வந்தடைந்த அவரை பெர்மாத்தாங் பாவ் அம்னோ பிரிவுத் தலைவர் டத்தோ முஹம்மத் ஜைதி முஹம்மத் சயீத், பள்ளிவாசல் அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் அன்வர்,  “Ramadan, Ketika Senja Terakhir Berlabuh" என்ற தலைப்பிலான பிரசங்கத்தில் சுமார் 700 தொழுகையாளிகளுடன் இணைந்தார்.

இந்தச் சபையில் பினாங்கு துணை முதல்வர் I டத்தோ டாக்டர் முஹம்மத் அப்துல் ஹமீதும் கலந்துகொண்டார்.

தொழுகையைத் தொடர்ந்து, பிரதமர் நாடு தழுவிய கொண்டாட்டத்திற்கு முன்னதாக ஈகைத் திருநாள் தயாரிப்புகளைக் காண பெர்மாத்தாங் பாசீர் சமூகத்திற்குச் சென்றார்.

தனது பயணத்தை முடித்துக் கொள்வதற்கு முன்பு, பெர்மாட்டாங்க் பாசீர் சமூக மண்டபத்தில் நடைபெறும் “Santai Akhir Ramadan Bersama Pimpinan Komuniti Permatang Pauh” நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ள உள்ளார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset