செய்திகள் மலேசியா
இன்று மாலை பல மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
கோலாலம்பூர்:
மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (METMalaysia) படி, இன்று மாலைக்குள் பல மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (METMalaysia) எதிர்பார்க்கிறது.
பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜயா, நெகிரி செம்பிலான் ஆகிய பல பகுதிகளிலும் கெடா, பஹாங் ஆகியவற்றின் உட்புறங்களிலும் இந்த வானிலை பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக METMalaysia தெரிவித்துள்ளது.
சபாவில் பிற்பகலில் மேற்குக் கடற்கரை, சண்டாக்கான் ஆகிய பல பகுதிகளில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சரவாக் மாநிலத்தில் கூச்சீங், செரியான், சமராஹான், ஸ்ரீ அமான் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரவில், சிலாங்கூரின் உட்புறப் பகுதியைத் தவிர, தீபகற்பத்தின் பெரும்பாலான மாநிலங்கள் வறண்ட வானிலையைக் கொண்டிருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சபா, சரவாக்கில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபாவில் உட்புற, தாவாவ் பகுதிகள் பாதிக்கப்படும், அதே நேரத்தில் சரவாக்கில் செரியான், காப்பிட் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 2:40 pm
சவுத்கீ பகுதில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் சிங்கப்பூரில் கைது
March 20, 2026, 2:16 pm
முந்திச் சென்றது ஒரு குற்றமா?: பள்ளிவாசலில் இருந்து திரும்பியவரைச் சித்திரவதை செய்த கும்பல்
March 20, 2026, 12:40 pm
அரசாங்க அதிகாரி போல் நடித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் மற்றொரு மலேசியர் கைது
March 20, 2026, 12:38 pm
"பண்டிகை உங்களுக்கு... மரண பயம் அவற்றுக்கா?": பெட்டிகளில் அடைத்து சந்தைகளில் வீசப்படும் பூனைகள்
March 20, 2026, 11:09 am
