நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

100 ஆண்டுகள் என்று சொன்னால் மட்டும் போதாது ஆதாரமும் ஆவணமும் வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

அம்பர் தெனாங்:

நாட்டில் 100 ஆண்டுகள் என்று சொன்னால் மட்டும் போதாது அதற்கான ஆதாரமும் ஆவணமும் வேண்டும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.

அம்பர் தெனாங் தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இன்று ரதி மன்மதன் காமன் திருவிழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி.

குறிப்பாக மலேசியாவிலேயே இந்த ஆலயத்தில் மட்டும் தான் இத்திருவிழா நடைபெறுகிறது.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தோட்டத்தில் இவ்விழா நடைபெறுவதாக கூறப்படுகிறது.

பல தலைமுறைகளாக இந்த விழாவை நடத்தி வரும் ஆலய நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகள்.

இந்த விழாவை நடத்தினால் மட்டும் போதாது அதை முறையாக ஆவணப்படுத்த வேண்டும்.

அதே வேளையில் இந்த விழாவை புத்தகமாக போட்டாலும் அதன் செலவை ஏற்க நான் தயார்.

காரணம் இந்த நாட்டில் இப்போது ஆவணமும் ஆதாரமும் மட்டுமே உண்மையாக கருதப்படுகிறது.

இதே போன்று 100 ஆண்டு ஆலயங்கள் என்று சொன்னால் மட்டும் போதாது.

அதற்காக ஆவணங்களையும் ஆதாரத்தையும் முறையாக கொண்டிருக்க வேண்டும்.

இதன் மூலம் ஜம்ரி வினோத் போன்றோரின் வாய்களை அடைக்க முடியும் என்று டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset