நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜித்தா, மதீனா விமான சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கும்

பெட்டாலிங் ஜெயா: 

நாளை முதல் ஜித்தா, மதீனா நகரங்களுக்கு விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று மலேசிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்கவும் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதையடுத்து, மத்திய கிழக்கு பகுதிகளுக்கான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

எனினும், தோஹா நகரத்திற்கான விமான சேவைகள் மார்ச் 13 வரை தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கும் என அந்த விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், நிலைமைகளின் முன்னேற்றங்களை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் பாதுகாப்பான, நம்பகமான விமான சேவைகளை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்றும் மலேசியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset