நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணைய சூதாட்ட கும்பல் மீது போலிஸ் சோதனை: 5 பேர் கைது

கோலாலம்பூர்: 

புக்கிட் ஜாலில் பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் போலிசார் நடத்திய சோதனையில் ஒரு உள்ளூர் பெண் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டதில் சீனாவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டதாக நம்பப்படும் இணைய சூதாட்ட நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. 

மதியம் 1 மணியளவில் இந்த சோதனையைக் குற்றவியல் புலனாய்வுத் துறை (JSJ), கோலாலம்பூர் காவல் கண்காணிப்பு தலைமையகம் (IPK) ஆகியவற்றின் கீழ் உள்ள குற்றக் கடத்தல், சூதாட்டம், துணைப் பிரிவு (D7) மேற்கொண்டதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.

முதலாவது சோதனையில் 36 வயதுடைய ஒரு உள்ளூர் பெண் கைது செய்யப்பட்டார்.
அந்தக் கைது நடவடிக்கையின் அடிப்படையில் அருகிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் மேலும் ஒரு சோதனை நடத்தப்பட்டது.

“அந்தச் சோதனையில், இணையதள சூதாட்டத்தை நிர்வகித்து கொண்டிருந்த 25 முதல் 35 வயதுக்குள் உள்ள மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் ஆகிய நான்கு சீன குடிமக்களும் கைது செய்யப்பட்டனர்.

“விசாரணையில், இந்தச் சந்தேக நபர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இணைய சூதாட்ட நடவடிக்கைகளை நிர்வகிக்கும், ஏற்பாடு செய்யும், விளம்பரப்படுத்தும் முகவர்களாகச் செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தக் கும்பல் கடந்த இரண்டு மாதங்களாகச் செயல்பட்டு வந்ததாகவும், சூதாட்ட நடவடிக்கைகளை நடத்துவதற்காக அந்த இடத்தை மாதத்திற்கு சுமார் RM2,000 வாடகைக்கு எடுத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், மேற்கொண்ட சோதனையில் கைது செய்யப்பட்ட அனைத்து சீன குடிமக்களும் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைந்திருந்தது தெரியவந்தது.

“சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்காக திங்கட்கிழமை வரை மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“தலைநகரில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளை ஒழிக்க கோலாலம்பூர் போலிஸ் தலைமையகம் D7 பிரிவின் மூலம் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset