செய்திகள் மலேசியா
கவுன்சில் அதிகாரியைத் தாக்கிய சட்டவிரோத சிகரெட் விற்பனையாளர்கள்: போலிஸ் விசாரணை தீவிரம்
சண்டாக்கான்:
இங்குள்ள பத்து 8 சந்தைப் பகுதியில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி மன்ற அமலாக்க அதிகாரி ஒருவர், சட்டவிரோத சிகரெட்டுகளை விற்பனை செய்ததாக நம்பப்படும் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டார்.
சம்பந்தப்பட்ட அதிகாரி அந்தப் பகுதியில் திறந்தவெளியில் டியூட்டி-ஃப்ரீ சிகரெட்டுகளை விற்பனை செய்யும் நபரைக் கண்டித்து எச்சரித்தாக சண்டாக்கான் போலீஸ் தலைவர் ஜார்ஜ் அப்துல் ரஹ்மான் கூறினார்.
“பின்னர், வாக்குவாதம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட அந்த அதிகாரி பிற்பகல் 2.30 மணியளவில் பல அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்," என்று அவர் தெரிவித்தார்.
இச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஜார்ஜ் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து அதிகாரியைக் காயப்படுத்திய சட்டவிரோத சிகரெட் விற்பனையாளர்கள் குழு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சண்டாக்கான் நகராட்சி மன்றத் தலைவர் வால்டர் கென்சன் தெரிவித்துள்ளார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 7, 2026, 11:39 pm
100 ஆண்டுகள் என்று சொன்னால் மட்டும் போதாது ஆதாரமும் ஆவணமும் வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
March 7, 2026, 11:18 pm
ஜித்தா, மதீனா விமான சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கும்
March 7, 2026, 11:16 pm
இணைய சூதாட்ட கும்பல் மீது போலிஸ் சோதனை: 5 பேர் கைது
March 7, 2026, 11:14 pm
வெளிநாட்டு தாக்குதல், சதி முயற்சிகளில் இருந்து நாட்டைப் பாதுகாக்க அரசு உறுதி: பிரதமர்
March 7, 2026, 11:12 pm
ரமலான் பசாரில் மக்களைச் சந்தித்த மாமன்னர்
March 7, 2026, 10:27 pm
தேச முன்னேற்றத்தின் முதன்மை உந்துசக்தியாகத் திகழும் மகளிர்: டத்தோஸ்ரீ ரமணன்
March 7, 2026, 10:25 pm
