செய்திகள் மலேசியா
ரமலான் பசாரில் மக்களைச் சந்தித்த மாமன்னர்
கோலாலம்பூர்:
மாட்சிமை தங்கிய மாமன்னர் மாண்புமிகு அல் சுல்தான் இப்ராஹிம், இன்று தாமான் லாவ்வுத்தான் பீரு பகுதியில் நடைபெற்ற ரமலான் பசாருக்கு வருகை தந்து பொதுமக்களைச் சந்தித்து அங்குள்ள வணிக சூழ்நிலையைப் பார்வையிட்டார்.
அந்தப் சந்தையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒவ்வொரு கடை உரிமையாளருக்கும் தனது தனிப்பட்ட வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.
அவரது வருகை அங்கு இருந்த பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. பலர் அவருடன் கைகுலுக்கியும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
மேலும், மெர்சிங் மாவட்ட அதிகாரி, ஜமில் ஹஸ்னி அப்துல்லாவும் 21-வது சிறப்பு நடவடிக்கை குழுவின் (ஜிஜிகே) தளபதி டத்தோ அஹ்மத் ஷுஹைமி மாட் வஜாப் ஆகியோரும் மாமன்னர் வருகையின்போது உடனிருந்தனர்.
மாமன்னர் அங்குள்ள உணவுக் கடைகளைப் பார்வையிட்டு, வியாபாரிகளுடனும் வருகை தந்த பொதுமக்களுடனும் குறிப்பாக குழந்தைகளுடன், நெருக்கமாக உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 7, 2026, 11:39 pm
100 ஆண்டுகள் என்று சொன்னால் மட்டும் போதாது ஆதாரமும் ஆவணமும் வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
March 7, 2026, 11:18 pm
ஜித்தா, மதீனா விமான சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கும்
March 7, 2026, 11:16 pm
இணைய சூதாட்ட கும்பல் மீது போலிஸ் சோதனை: 5 பேர் கைது
March 7, 2026, 11:14 pm
வெளிநாட்டு தாக்குதல், சதி முயற்சிகளில் இருந்து நாட்டைப் பாதுகாக்க அரசு உறுதி: பிரதமர்
March 7, 2026, 10:27 pm
தேச முன்னேற்றத்தின் முதன்மை உந்துசக்தியாகத் திகழும் மகளிர்: டத்தோஸ்ரீ ரமணன்
March 7, 2026, 10:25 pm
மாமன்னரை சந்தித்து மனிதவள அமைச்சின் திட்டங்கள் குறித்து டத்தோஸ்ரீ ரமணன் விளக்கமளித்தார்
March 7, 2026, 9:05 pm
