செய்திகள் மலேசியா
வெளிநாட்டு தாக்குதல், சதி முயற்சிகளில் இருந்து நாட்டைப் பாதுகாக்க அரசு உறுதி: பிரதமர்
கூலிம்:
வெளிநாட்டு தாக்கம், தந்திரங்கள், சூழ்ச்சி, எந்தவித வெளிநாட்டு சதி முயற்சிகளிலிருந்தும் மலேசியா பாதுகாக்கப்படும் என்பதை அரசு உறுதி செய்யும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் முன்பு தகவல் தெரியாத RM15.5 பில்லியன் அளவிலான நிதி கசிவை நாடு தடுக்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
“மலேசியாவை மெத்தனமான நாடாகவும், அதிக நிதி கசிவு உள்ள இடமாகவும் நாம் பார்க்க முடியாது. கூட்டாக திட்டமிட்டு லஞ்சம் கொடுத்து நாட்டைச் சீரழிக்கும் நிலை இனி தொடர முடியாது. இந்தத் தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம். இது தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதிருக்கும்.
"பாதிக்கப்பட்டவர்கள் சிறியவர்கள் அல்ல, பலரிடம் சர்வதேச ஊடகங்கள், சமூக ஊடகங்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய பெரிய நிதி அவர்களிடம் உள்ளது. இதைத்தான் நாம் இப்போது காண்கிறோம்," என்று அவர் கூறினார்.
எனவே, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருந்து பொறுப்பற்ற தரப்புகளின் கருவியாக மாறாதிருக்க வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.
இந்தக் கருத்துகளை அவர் 'Majlis Berbuka Puasa Perdana Menteri Bersama Badan Beruniform' நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
மேலும், கூலிம் பொது செயல்பாட்டுக் குழுவின் (PGA) இரண்டாம் படைத்தளத்தில் பழுதடைந்திருந்த குழாய், மின்கம்பி அமைப்புகளை மேம்படுத்துவதற்காக RM18 மில்லியன் உடனடி நிதிக்கு அவர் ஒப்புதல் அளித்தார்.
தொடர்ந்து, கெடாவில் உள்ள குடிசைப் பள்ளிகளைச் சரிசெய்ய RM26.9 மில்லியன் நிதியை ஒதுக்குவதாகவும் பிரதமர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 7, 2026, 11:39 pm
100 ஆண்டுகள் என்று சொன்னால் மட்டும் போதாது ஆதாரமும் ஆவணமும் வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
March 7, 2026, 11:18 pm
ஜித்தா, மதீனா விமான சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கும்
March 7, 2026, 11:16 pm
இணைய சூதாட்ட கும்பல் மீது போலிஸ் சோதனை: 5 பேர் கைது
March 7, 2026, 11:12 pm
ரமலான் பசாரில் மக்களைச் சந்தித்த மாமன்னர்
March 7, 2026, 10:27 pm
தேச முன்னேற்றத்தின் முதன்மை உந்துசக்தியாகத் திகழும் மகளிர்: டத்தோஸ்ரீ ரமணன்
March 7, 2026, 10:25 pm
மாமன்னரை சந்தித்து மனிதவள அமைச்சின் திட்டங்கள் குறித்து டத்தோஸ்ரீ ரமணன் விளக்கமளித்தார்
March 7, 2026, 9:05 pm
