நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிறப்பை மறைத்து குழந்தையின் உடலை அடக்கம் செய்த சம்பவம்

ஷா ஆலம்: 

கடந்த மாதம் செக்ஷன் 21 இஸ்லாமிய கல்லறையில் குழந்தை ஒன்றின் உடலை அடக்கம் செய்து பிறப்பை மறைத்த ஆடவர் ஒருவர் உட்பட அவரது பெண் தோழிக்கும் இன்று இங்குள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றம் தலா RM5,500 அபராதம் விதித்துள்ளது.

நூர் அதிஷா பல்கிஸ் இஸ்மாயில் (22), கட்டிடத் தொழிலாளியான முஹம்மத் ரசி (26) ஆகியோருக்கு நீதிபதி வான் நூரா நிசா ங்காதிரின் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபின் குற்றம் ஒப்புக்கொண்டதால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் இருவருக்கும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு குற்றவியல் பிரிவு 318ன் கீழ் பதிவு செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

விசாரணையில் முஹம்மத் ரசியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் ஹஸ்வான் ஹசன், தனது தரப்பினர் குழந்தையை மறைக்க நினைக்கவில்லை என தெரிவித்தார்.

“குழந்தை உயிரிழந்த நிலையில் இருந்ததால், அவர் அதை அந்த கல்லறையில் அடக்கம் செய்தார்.

அவர் தனது தவற்றை உணர்ந்து ஒப்புக்கொண்டுள்ளதால் அவருக்கு அபராதம் மட்டுமே விதிக்குமாறு அந்த வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

நூர் அதிஷாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் முஹம்மத் சைபுல்லா, குற்றவாளி இளம் வயதுடையவர் என்றும் இது அவரின் முதல் குற்றம் என்றும் தெரிவித்தார்.

எனினும், மற்றவர்களுக்கு பாடமாக அமையக்கூடிய வகையில் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் நூர் அமீரா ஜஹாரி நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset