நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது

தெஹ்ரான்: 

தெஹ்ரானைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் அரசு இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ பதிலோ அல்லது அறிக்கையோ வெளியிடவில்லை.

 தெஹ்ரான் மட்டுமின்றி, தலைநகரத்திற்கு அருகிலுள்ள கோம், நாட்டின் மத்திய பகுதியில் உள்ள இஸ்பாஹான் உள்ளிட்ட பல நகரங்களிலும் இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்தியுள்ளதாக 'Fars News Agency' தகவல் வெளியிட்டுள்ளது.

ஈரானின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றும், அதிபர் அரண்மனை வளாகம் அமைந்துள்ள பாஸ்தூர் பகுதியும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்படுவதற்கு முன், இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் (IRNA), அதிபர் மசூத் பெஷேஷ்கியன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக செய்தி வெளியிட்டது.

இதுவரை இந்தத் தாக்குதலில் எந்த உயர்நிலை அரசு அதிகாரியும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

மேலும், பாஸ்தூர் பகுதியில் சிலர் காயமடைந்ததாகவும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset