நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஜுன் ஹாவ்-ஜஸ்டின் அதிர்ச்சி தோல்வி: தாமஸ் கப் கனவு சிதையுமா?

கோலாலம்பூர்: 

ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 தொடரின் முதல் சுற்றில் லியோங் ஜுன் ஹாவோ, ஜஸ்டின் ஹோ ஆகியோரின் ஆரம்ப தோல்விகள், தாமஸ் கோப்பையை வெல்வதற்கு முன்னதாக தேசிய அணியின் தயாரிப்புகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளதாக விளையாட்டு பார்வையாளர் ஜகாரியா ரஹீம் தெரிவித்துள்ளார்.

“தாமஸ் கப் போன்ற அணிப் போட்டிகளில், ஒற்றையர் பிரிவு மிக முக்கியமானது. இரட்டையர் பிரிவில் கிடைக்கும் இரண்டு புள்ளிகளுடன் சேர்த்து, ஒற்றையர் வீரர்களும் குறைந்தது ஒரு புள்ளியாவது வழங்க வேண்டும். ஆனால் ஜெர்மனியில் கிடைத்த முடிவுகளைப் பார்க்கையில், நாம் அதிகமாக இரட்டையர் மீது சார்ந்திருப்பது தெரிகிறது,” என்றார் அவர்.

ஜுன் ஹாவ் தைவான் வீரரிடமும், ஜஸ்டின் ஹோங்காங் வீரரிடமும் தோல்வியடைந்தனர். இது இருவரின் நிலைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புவதாக ஜகாரியா கூறினார்.

“அணிப் போட்டிகளில் வேறு விதமான மனநிலை தேவை. ஒற்றையர் வீரர்கள் போட்டியளிக்கவில்லை என்றால், அழுத்தம் மீண்டும் இரட்டையருக்கு திரும்பும். உலகின் சிறந்த 10 ஜோடிகளில் மூன்று ஜோடிகள் நமக்கு இருந்தாலும், அவர்களுக்கும் ஒற்றையர் புள்ளிகள் ஆதரவாக தேவை,” என்றார் அவர்.

லீ ஜீ ஜியா தாமஸ் கப் அணியில் சேர்வது மன உற்சாகத்தை அளிப்பதாக இருந்தாலும், அவரின் உடல்நிலை சீராக இல்லை என்றும், பழைய காயம் மீண்டும் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஜகாரியா கூறினார்.

“இரட்டையர் பிரிவில் உலகின் சிறந்த அணிகள் இருந்தாலும் ஒற்றையர் பிரிவில் மூவரும் ஒரே மாதிரியான நிலையில் உள்ளனர்; இன்னும் நாம் எதிர்பார்த்த அளவை எட்டவில்லை,” என்றார் அவர்.

தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, மலேசியாவின் இலக்கு அரையிறுதிக்குச் செல்வதே என்றும், ஆனால் ஒற்றையர் பிரிவின் செயல்திறன் மேம்படாவிட்டால் அது கடினமான பணியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், 'All England Open Badminton Championships' போட்டியில் நாட்டின் ஒரே ஒற்றையர் பிரதிநிதியாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைப்பதால், ஜுன் ஹாவ் விரைவில் மீண்டு வருவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset