நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயத்தை உடைத்த ஆர்வலர் கைது; பிரதமரின் உத்தரவை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது: வழக்கறிஞர்

கோலாலம்பூர்:

சட்டவிரோத ஆலயங்களை எதிர்த்துப் போராடும் பிரச்சார ஆர்வலர் தமீம் தஹ்ரி, இன்று அதிகாலை தாமான் ரவாங் பெர்டானாவில் ஒரு கோவிலை உடைத்த பின்னர் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவரது வழக்கறிஞர் ஐடில் காலித் தெரிவித்தார்.

இந்தப் பகுதி 2018 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட தாயாசன் குப்ராவுக்குச் சொந்தமான நிலம்.

ஏழைகளுக்கு வீடுகள் கட்டும் திட்டத்திற்கு வழி வகுக்கும் வகையில் இந்த உடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ஐடில் விளக்கினார்.

நீண்ட காலமாக திட்டமிடப்பட்டபடி, ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டத்தைக் கட்டுவதற்கு இது வழி வகுக்கும்.

இன்று அதிகாலையில் சுத்தம் செய்யும் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset