நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய ஆடைப் பொதியில் RM2.4 மில்லியன் நாணயக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

சிப்பாங்:

கடந்த வெள்ளிக்கிழமை புதிய ஆடைகள் பொதியில் சுமார் RM2.4 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயத்தை மறைத்து வைத்து கடத்த முயன்ற ஆடவர் ஒருவரின் முயற்சி, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) பைகளைச் ஸ்கேன் செய்யும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ஆடவரின் முயற்சி, KLIA டெர்மினல் 1-இன் சர்வதேச வருகை பகுதியில் மலேசிய எல்லை கட்டுப்பாடு, பாதுகாப்பு நிறுவனம் (AKPS) மேற்கொண்ட சோதனையின் மூலம் தடுக்கப்பட்டது.

காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையில், வெளிநாட்டு விமானத்தில் வந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக AKPS வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

பைகளைச் ஸ்கேன் செய்யும் சோதனையில் சந்தேகத்திற்கிடமான படங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பயணி மேலதிக சோதனைக்காகச் சுங்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

“அந்தச் சோதனையில், புதிய ஆடைகள் பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்ட பல்வேறு வெளிநாட்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

“பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை சுமார் RM2.4 மில்லியன் மதிப்புள்ளதாகும்” என சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையில் மூன்று பயணப்பைகள், இரண்டு கைபேசிகள், ஒரு சிறிய பை (பவுச்ச்) ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு பணமோசடி தடுப்புச் சட்டம், பயங்கரவாத நிதி தடுப்பு, சட்டவிரோத வருமானம் தொடர்பான சட்டம் 2001 (சட்டம் 613) இன் பிரிவு 28-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

“சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணை, நடவடிக்கைக்காக சுங்கத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

“நாட்டின் நுழைவாயில்களில் எல்லை பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு கடத்தல், எல்லைத் தாண்டிய குற்றங்களை ஒழிப்பதில் AKPS KLIA தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset