செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஈரான் அதிபர் கமோனி படுகொலையை கண்டித்து சென்னையில் சில மணி நேரங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் திரண்டு எழுச்சி: திருமாவளவன், தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு, மல்லை.சத்யா உள்ளிட்டோர் பங்கேற்பு
சென்னை:
அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு பயங்கரவாதத்தால் ஈரான் அதிபர் காமெனி அவர்கள் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்ட செய்தி உலகை உலுக்கி இருக்கிறது.
இன்று காலை உலகின் பல தலைநகரங்களில் கண்டன பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக நடந்து வருகிறது.
இந்நிலையில் காலை 10 மணிக்கு தலைநகர் சென்னையில் தமிழ்நாடு ஷியா ஜமாத் ஏற்பாட்டில் அவசர கண்டனப் பேரணிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு ஷியா காஜி குலாம் முஹம்மது மெஹ்தி கான் அவர்கள் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை தொடர்பு கொண்டு பேசினார்.
மதியம் 1:30 மணிக்கு பெரும் கொந்தளிப்போடும், கண்ணீருடன் திரண்டு ஆண்களும், பெண்களும் ராயப்பேட்டை அமிருன்னிசா கபரஸ்தான் வளாகத்துக்கு அருகில் கூடினர்.
பலர் கதறி அழுத வண்ணம் முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது அங்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.
பேரணியில் தலைவர்கள் அனைவரும் முழக்கமிட சற்று நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியில் இணைந்தனர்.
ஆங்காங்கே கடைகளும் மூடப்பட்டு எல்லோரும் பேரணியில் உணர்வுபூர்வமாக கலந்தனர் .
பேரணி புதுக்கல்லூரி அருகே கடந்து அமெரிக்க தூதரகத்தை நோக்கி முற்றுகையிடுவது என்ற அடிப்படையில் முன்னேறியது.
கூட்டத்தின் ஆவேசமான நகர்வை கண்டு பதறிய காவல்துறையினர், மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களிடம் நிலைமை மோசம் அடையாமல் சீரமைக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவர் ஷியா காஜியிடம் இது குறித்து பேசினார்.
அதன் பிறகு ஷியா ஜமாத்தின் பிரமுகர்களும், சைதை.சாதிக் உள்ளிட்ட பலரும் மக்களை ஒழுங்குப்படுத்தினார்கள்.
இதனிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் .திருமாவளவன், திராவிட வெற்றி கழகத் தலைவர் மல்லை சத்யா, மஜக இணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்கள் வன்னியரசு, ஷாநவாஸ் MLA, இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் குத்தூஸ், விசிக - இ.ஜ. பே செயலாளர் அப்துல் ரஹ்மான், ஷியா - சன்னி கூட்டமைப்பு தலைவர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் அதில் பங்கேற்றனர்.
தாமதமாக தகவல் தெரிந்த இடதுசாரி செயல்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் என பலரும் கடைசி நேரத்தில் வருகை தந்து அமெரிக்காவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
நிறைவாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் மல்லை. சத்யா, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஷாநவாஸ் ஆகியோரும் பேசினர்.
நிறைவாக ஷியா காஜி குலாம் முஹம்மது மெஹ்தி ஈரான் ஆன்மிக தலைவர் பற்றி உருக்கமுடன் பேசும்போது மக்கள் கண்ணீர் விட்டனர் .
ரமலானில் பசித்திருந்த நிலையிலும், வெயிலையும் பாராமல் திரண்டு இருந்த கூட்டம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளத்தில் திணறியது.
திருவல்லிக்கேணியில் இருந்து ஆயிரம் விளக்கு பள்ளிவாசல் வரை இருக்கக்கூடிய சாலை முற்றிலுமாக ஸ்தம்பித்து போனது.
அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் அதிபர் காமெனியை படுகொலை செய்ததை கண்டித்து இந்தியாவின் பெரு நகரங்களில் நடைபெற்ற முக்கியமான பேரணியில் இதுவும் ஒன்றாகும்.
இரண்டு மணி அவசர அழைப்பில் சென்னை மாநகரத்தில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட மஜக வின் முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 4:28 pm
சசிகலாவின் புதிய கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
March 12, 2026, 11:35 am
பிளஸ்-2 மாணவிக்கு நேர்ந்த விபரீதம்: தூத்துக்குடியை உலுக்கிய பாலியல் வன்கொடுமை கொலை
March 12, 2026, 8:52 am
மதுரை விமான நிலையத்திற்கு அனைத்துலக அந்தஸ்து
March 11, 2026, 5:04 pm
இறந்துவிட்டதாக இறுதிச்சடங்கு செய்த பிறகு வீடு திரும்பிய தந்தை: பொள்ளாச்சியில் பரபரப்பு
March 11, 2026, 6:03 am
சிலிண்டர் தட்டுப்பாட்டால் இன்றுமுதல் தமிழகத்தின் பெரும்பாலான உணவகங்கள் மூடப்படுகின்றன
March 10, 2026, 5:28 pm
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வாரம் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
March 9, 2026, 2:26 pm
கொளத்தூர் தொகுதியில் ரூ.45 கோடியில் 9 திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
March 9, 2026, 2:23 pm
தமிழக அரசை கண்டித்து 12-ஆம் தேதி தவெக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்
March 7, 2026, 2:47 pm
