செய்திகள் தமிழ் தொடர்புகள்
அமெரிக்கா-ஈரான் இடையேயான போா் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை:
அமெரிக்கா-ஈரான் இடையேயான போா் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உச்சபட்ச தலைவா் அயதுல்லாஹ் அலி கமேனி அமெரிக்கா-இஸ்ரேலிய கூட்டுப் படை நிகழ்த்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
இதைத் தொடா்ந்து உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று ஆயிரக்கணக்கான பொது மக்கள் அமெரிக்கத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொதுமக்கள் துரகத்துக்குள் நுழைந்து சூறையாடினர். இறுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 22 பேர் கொல்லப்பட்டனர். அந்த நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் என்று முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில். சென்னை அண்ணா சாலை பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 உதவி ஆணையா்கள் மேற்பாா்வையில் 200 போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அமெரிக்க தூதரகத்தைச் சுற்றியுள்ள கதீட்ரல் சாலை, அவ்வை சண்முகம் சாலை, பீட்டா்ஸ் சாலை பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கலவர தடுப்பு வாகனமான வஜ்ரா, தயாா் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலை ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு பகுதிகளில் ஷியா பிரிவு இஸ்லாமியா்கள் அதிகமாக வசிப்பதால் அந்தப் பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலம் போலீஸாா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 9:57 am
சென்னையில் வாகனங்களுக்கான எல்பிஜி, சிஎன்ஜி எரிவாயுக்கள் கிடைக்காததால், ஓட்டுநா்கள் கடும் அவதி
April 16, 2026, 9:19 am
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு நிறைவு: கோடை விடுமுறை இன்று தொடங்குகிறது
April 14, 2026, 6:47 pm
தேர்தல் நாள் அண்மைய தகவல்களை செயலியில் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி
April 14, 2026, 4:35 pm
விபரீதத்தில் முடிந்த குடும்பத் தகராறு: பெண் காவலரை கத்தியால் குத்திய கணவர் கைது
April 14, 2026, 4:18 pm
பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்த சமயபுரம்: சித்திரை திருவிழாவின் சிகரமான தேரோட்டம் இனிதே நிறைவு
April 13, 2026, 8:51 pm
நிதி அமைச்சர் நிர்மலா கூறியது அப்பட்டமான பொய்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்
April 13, 2026, 1:19 pm
பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்
April 10, 2026, 10:37 pm
