நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மீபாவின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் தொடங்கின; கால்பந்து கிளப்புகளை வலுப்படுத்துவது விளையாட்டாளர்களை மேம்படுத்தும்: அன்பானந்தன்

செலயாங்:

கால்பந்து கிளப்புகளை வலுப்படுத்தும் திட்டம் நிச்சயம் விளையாட்டாளர்களை மேம்படுத்தும்.

மீபாவின் தலைவர் அன்பானந்தன் இதனை கூறினார்.

2026ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்கியதும் மீபாவின் கால்பந்து திட்டங்கள் தொடங்கி விட்டன.

கடந்த காலங்களைப் போன்று தொடர்ச்சியான கால்பந்து போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக இளம் கால்பந்து வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தப் போட்டிகள் அனைத்தும் நடத்தப்படும்.

இந்நிலையில் இன்று மீபாவில் ஒரு பெயர் பெற்றுள்ள கால்பந்து கிளப்புகளுக்கான சிறப்பு பட்டறை ஒன்று நடைபெறுகிறது.

கால்பந்து வீரர்களை உருவாக்கும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள கிளப்புகள் மிகவும் வலுவாக இருக்க வேண்டும்.

நிதி உட்பட அனைத்து ரீதியிலும் வலுவாக இருந்தால் மட்டுமே கிளப்புகளின் இலக்கு வெற்றி அடையும். இதனை இலக்காக கொண்டு இன்றைய பட்டறை நடத்தப்படுகிறது.

மேலும் இந்த பட்டறையில் கால்பந்து துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தங்களின் அனுபவங்களையும் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

இது இந்த பட்டறையில் கலந்து கொண்ட கால்பந்து கலப்புகளுக்கு பெரும் பயனாக இருக்கும் என நம்புகிறோம்.

இதன் அடிப்படையில் வரும் காலங்களிலும் இது போன்ற பட்டறைகள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று அன்பானந்தன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset