நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

நிச்சயம் 1,000 கோல்களை அடிப்பேன்: ரொனால்டோ

ரியாத்:

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ 1,000 கோல்களைப் புகுத்தும் தமது குறிக்கோளில் இன்னும் உறுதியாய் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது சவூதி அரேபியாவின் அல்-நசர் குழுவில் விளையாடும் அவர் இதுவரை நாட்டுக்காகவும் குழுக்களுக்காகவும் மொத்தம் 956 கோல்களை அடித்துள்ளார்.

இன்னும் ஓராண்டு அல்லது ஈராண்டு மட்டுமே அவர் கால்பந்து விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து விளையாடுவது சிரமமாக இருந்தாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாய் இருப்பதாக அவர் சொன்னார்.

துபாயில் நடைபெற்ற குளோபல் ஸ்கோர் விருது நிகழ்ச்சியின்போது 40 வயது பிறந்த நாள் நிகழ்ச்சியில் ரொனால்டோ அதனைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அவருக்கு மத்திய கிழக்கின் சிறந்த விளையாட்டாளர் என்ற விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து 2ஆவது ஆண்டாக அவர் அந்த விருதைப் பெறுகிறார்.

காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றால் கண்டிப்பாக 1,000 கோல்களை எட்டிவிடுவேன் என்று போர்த்துகலைச் சேர்ந்த ரொனால்டோ நம்பிக்கையுடன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset