நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

செல்சி கால்பந்து அணியின் நிர்வாகி திடீர் விலகல்

லண்டன்:

இங்கிலாந்தில் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் விளையாடும் பிரபலமான அணிகளில் ஒன்றான செல்சி கிளப்பின் தலைமை பயிற்சியாளராக என்ஜோ மரிஸ்கா 2024ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இருந்து வருகிறார்.

தற்போது பிரிமியர் லீக் போட்டியில் செல்சி அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

கடைசி 7 லீக் ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 

இதனால் அணியின் பயிற்சியாளர் என்ஜோ மரிஸ்கா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

அவருக்கும், கிளப் நிர்வாகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. கிளப்பில் தனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று சமீபத்தில் வெளிப்படையாக அவர் கூறினார்.

இந்த நிலையில் ஒப்பந்த காலம் 2029ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மரிஸ்கா நேற்று விலகினார். 

இதனை தொடர்ந்து புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் செல்சி அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset