நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

48ஆவது கிண்ணத்தை வென்ற லியோனல் மெஸ்ஸி: உலகின் முதல் வீரராக சாதனை

நியூயார்க்:

லியோனல் மெஸ்ஸி தனது 48ஆவது பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

இந்தர்மியாமி அணி முதல் முறையாக எம்எல்எஸ் கிண்ணத்தை வெல்ல மெஸ்ஸி முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38 வயது) பார்சிலோனா எப்சி அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பின்னர் பிஎஸ்ஜி அணியில் இருந்து இந்தர்மியாமி அணிக்கு கடந்த 2023 முதல் விளையாடி வருகிறார்.

எம்எல்எஸ் கிண்ண இறுதிப் போட்டியில் வான்கெவர் அணியை 3-1 என வீழ்த்தியது.

இதில் மெஸ்ஸி 2 கோல்களை அடிக்க உதவி செய்து அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 48ஆவது பட்டத்தை வென்ற முதல் வீரராக முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்த சீசனில் எம்எல்எஸ் தொடரின் மதிப்பு மிக்க வீரர் விருதையும் வென்றார்.

மேலும், தங்கக் காலணி விருதையும் வென்று அசத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset