நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸி தலைமையில் புதிய வரலாறு: இந்தர்மியாமி சாம்பியன்

நியூயார்க்:

லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இந்தர்மியாமி அணி முதல்முறையாக ஈஸ்டர்ன் கான்ஃபெரன்ஸ் கிண்ணத்தை வென்றுள்ளது.

கடந்த சீசனில் பிளே-ஆப் சுற்றுவரை வந்த இந்தர்மியாமி அணி அரையிறுதுக்கு முன்னேறாமல் தோல்வியுற்றது.

எம்எல்எஸ் தொடரில் ஈஸ்டர்ன் கான்ஃபெரன்ஸ் குரூப்பில் இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணியும் ஷான் ஜான்சன் தலைமையிலான நியூயார்க் சிட்டி அணியும் மோதின.

இந்தப் போட்டியில் இந்தர்மியாமி அணி 5-1 என அபார வெற்றி பெற்றது.

இளம் அர்ஜெண்டினா வீரர் டாடியோ அலெண்டே ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தர்மியாமி அணி முதல் முறையாக ஈஸ்டர்ன் கான்ஃபெரன்ஸ் கிண்ணத்தை வென்றுள்ளது.

அடுத்ததாக, எம்எல்எஸ் கிண்ண போட்டிக்கான இறுதிப் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset