நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்னாள் தேசிய வூஷு பயிற்சியாளர் மறுத்தார்

அம்பாங்:

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளை முன்னாள் தேசிய வூஷு பயிற்சியாளர் ஒருவர் இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்தார்.

குற்றம் சாட்டப்பட்ட சியா கியான் கியோவ், தனக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிபதி நோர்ஷிலா கமருடின் முன் வாசிக்கப்பட்ட பின்னர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

கியான் கியோவ்  தன்னிடம் பயிற்சி பெற்ற 14 வயது ஏழு மாத இளம் பெண்ணை உடல் ரீதியான பாலியல் வன்கொடுமை செய்ததாக முதல் குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

இரண்டாவது குற்றச்சாட்டில் கியான் கியோவ் அப்போது 15 வயது  மூன்று மாத பெண்ணாக இருந்த அதே பாதிக்கப்பட்டவருக்கு எதிராக தனது செயலை மீண்டும் செய்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது அதே சட்டத்தின் பிரிவு 16 (1) உடன் சேர்த்துப் படிக்கப்படும் 2017ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டத்தின் பிரிவு 14(ஏ) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக துணை அரசு வழக்கறிஞர் முகமது ஹைருல் இக்ராம் ஹைருதீன், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒரு மலேசிய உத்தரவாதத்துடன் 15,000 ரிங்கிட் ஜாமீன் வழங்க முன்மொழிந்தார்.

கூடுதலாக, கியான் கியோவ் தனது அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும், பாதிக்கப்பட்டவருக்கும் அரசு தரப்பு சாட்சிகளுக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்று முகமது ஹைருல் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர் மிகவும் நோய்வாய்ப்பட்ட தாயாரை கவனித்துக்கொள்வதால், குறைந்த ஜாமீன் தொகையை பாதுகாப்பு வழக்கறிஞர் சிவநந்தன் ராகவா கோரினார்.

பின்னர் நீதிமன்றம் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 7,500 ரிங்கிட் ஜாமீன் விதித்தது.

மேலும் ஒரு மலேசிய உத்தரவாதமும், அரசு தரப்பு கோரிய கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset