நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு பின் ஓய்வு பெறுகிறார் ரொனால்டோ

ரியாத்:

2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவேன் என கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியோனோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, நிருபர்களிடம் அவர் கூறுகையில், 

வரும் 2026ல் உலகக் கிண்ண கால்பந்து போட்டி நடக்கும்போது எனக்கு 41 வயதாகி இருக்கும். அதுதான் எனது கடைசி உலகக் கிண்ண போட்டியாக இருக்கும்.

அதற்கு பின், அடுத்த உலகக் கிண்ண போட்டியில் கண்டிப்பாக ஆட மாட்டேன். 

கடந்த 25 வருடங்களாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன். 

அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தற்போது, சவூதி அரேபியாவின் அல் நஸர் அணிக்காக, பல கோடி ரிங்கிட் ஒப்பந்தத்தில் விளையாடி வருகிறார். 

அடுத்த ஆண்டு கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண போட்டி ரொனால்டோவின் ஆறாவது உலகக் கிண்ண போட்டியாகும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset