செய்திகள் விளையாட்டு
புதுப்பிக்கப்படும் பார்சிலோனா அரங்கத்தை பார்வையிட்ட லியோனல் மெஸ்ஸி உருக்கம்
மாட்ரிட்:
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் உள்ள காம்ப் நவ் கால்பந்து திடலை, லியோனல் மெஸ்ஸி பார்வையிட்டார்.
கால்பந்து ரசிகர்கள் அனைவரும் மீண்டும் பார்சிலோனாவுக்கு மெஸ்ஸி வருவாரா என ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் பல ஆண்டுகளாக விளையாடினார்.
கடைசியாக அணியில் ஏற்பட்ட பெருந்தொகையை செலவிட முடியாத நிலையில் அந்த அணியிலிருந்து கடந்த 2021-இல் விலகினார்.
தற்போது, அமெரிக்காவின் எம்எல்எஸ் தொடரில் விளையாடி வருகிறார்.
பார்சிலோனாவின் சொந்த திடலான காம்ப் நவ் திடலை புதுப்பித்து வருகிறார்கள்.
தற்போது இந்தத் திடலில் 27 ஆயிரம் பேர் மட்டுமே இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
இதனை முழுமையாக புதுப்பித்தபிறகு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் அமரும்படி உருவாக்கப்பட்டு வருகிறது.
உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கால்பந்து திடலாக இது உருவாகி வருகிறது.
இந்தத் திடலை உணர்ச்சிபொங்க மெஸ்ஸி பார்த்த புகைப்படங்கள், விடியோக்கள் வைரலாகி வருகின்றன.
என்னுடைய ஆன்மாவைத் தொலைத்த இடத்துக்கு நள்ளிரவு மீண்டும் வந்தேன்.
இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதராக என்னை ஆயிரத்துக்கும் அதிகமான முறை உணரவைத்தது இங்குதான்.
இங்குதான் நான் மிகவும் மனப்பூர்வ மகிழ்ச்சியாக இருந்தேன். மீண்டும் இங்கு வருவேன் என நம்புகிறேன் என்று மெஸ்ஸி உருக்கமாகக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 12:11 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கோப்வெர்டே அணி சாதனை
June 27, 2026, 12:09 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஸ்பெயின் முன்னேற்றம்
June 27, 2026, 8:23 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரான்ஸ் அசத்தல் வெற்றி
June 26, 2026, 3:57 pm
மைலோ அனைத்துலக கராத்தே போட்டியில் 1850 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்: மாஸ்டர் தியாகு
June 26, 2026, 10:01 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: துனிசியாவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
June 26, 2026, 8:33 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஜெர்மனி அதிர்ச்சி
June 25, 2026, 9:39 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரேலில் மகத்தான வெற்றி
June 25, 2026, 9:34 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சுவிட்ஸர்லாந்து அணி வெற்றி
June 24, 2026, 12:01 pm
