நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகின் 10ஆவது செல்வாக்கு மிக்க முஸ்லிம் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அங்கீகரிக்கப்பட்டார்

கோலாலம்பூர்:

உலகின் 10ஆவது செல்வாக்கு மிக்க முஸ்லிம்தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

ஜோர்டானின் ரோயல் இஸ்லாமிய மூலோபாய ஆய்வுகள் மையம் உலகின் 500 மிகவும் செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள் பட்டியலை வெளியிட்டது.

இதில்  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 10ஆவது செல்வாக்கு மிக்க முஸ்லிம் நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதே பிரிவில் கடந்த ஆண்டு 15ஆவது இடத்தில் இருந்த டத்தோஸ்ரீ அன்வார் இருந்தார்.

தற்போது அன்வாரின் இந்த உயர்வு, அவரது தலைமைத்துவத்திற்கும் உலகளவில் மலேசியாவின் நிலைப்பாட்டிற்கும் சர்வதேச அங்கீகாரத்தைப் பிரதிபலிக்கிறது.

மேலும் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 50 முஸ்லிம் பிரமுகர்களில் டத்தோஸ்ரீ அன்வரும் இடம் பெற்றுள்ளார். 

கட்டார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி முதலிடத்திலும், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்-அஜீஸ் அல்-சவுத் (எட்டாவது), இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ (15ஆவது) போன்றவர்களுடன் அன்வாரும் இடம் பெற்றுள்ளார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset