நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் அனைவருக்குமான அமைச்சர்; இந்திய இளைஞர்களின் வாழ்க்கையை உருமாற்றுவதே மிசி திட்டத்தின் இலக்கு: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

இந்திய இளைஞர்களின் வாழ்க்கையை உருமாற்றுவதே மிசி திட்டத்தின் முதன்மை இலக்காகும்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.

மனிதவள அமைச்சராக பொறுபேற்றது முதல் அனைவருக்குமான அமைச்சராக தான் நான் பணியாற்றி வருகிறேன்.

குறிப்பாக தொழிலாளர்கள் வர்க்கத்தில் எந்தவொரு பாராபட்சத்தையும் நான் பார்ப்பது இல்லை. எல்லாருக்கும் உரிய சேவைகளை வழங்கி வருகிறேன்.

இந்திய சமுதாயத்திற்கு பிரதிநிதிகள் இல்லை என்ற அதிருப்திகள் உள்ளன.

என்னை பொறுத்த வரையில் இந்திய மக்களுக்கும் உரிய சேவைகளை வழங்கி வருகிறேன்.

ஆக இந்திய சமுதாயம் பிரதிநிதிகள் இல்லை என கவலைப்பட வேண்டாம்.

மேலும் எனது அமைச்சின் கீழ் மிசி எனும் இந்திய இளைஞர்களுக்கான தொழில் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 5,000 இந்திய இளைஞர்கள் பயன் பெற்றுள்ளனர்.

இதன் அடிப்படையில் மிசி 2.0 திட்டத்தையும் நாங்கள் மேற்கொள்ள உள்ளோம்.

ஏதோ கணக்கிற்கு ஒருசில பயிற்சிகளை வழங்குவது மனிதவள அமைச்சின் நோக்கம் அல்ல.

நாங்கள் அளிக்கும் பயிற்சியில்  இந்திய இளைஞர்களை உருமாற்ற வேண்டும்.

இதன் அடிப்படையில்தான் இப்பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்று தமிழ் ஊடகங்களுடனான சிறப்பு விருந்துபசரிப்பில் அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

மடானி அரசாங்கத்தின் திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் தமிழ் ஊடகங்கள் முக்கிய பங்கை ஆற்றுகின்றன.

உங்களின் இப்பணி தொடர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset