நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 மில்லியன் ரிங்கிட் சவாலுக்காக மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் மொட்டை அடித்துக் கொண்டார்

கோலாலம்பூர்:

ஒரு மில்லியன் ரிங்கிட் சவாலுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் மொட்டை அடித்துக் கொண்டார்.

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான், நாட்டின் முதன்மையான தீவிர விளையாட்டு நிகழ்வான ஐயன்மேன் மலேசியா 2025 ஐ இந்த சனிக்கிழமை 13 மணி நேரத்திற்குள் முடிக்க உறுதி கொண்டுள்ளார்.

சவாலை வெற்றிகரமாக முடித்தால், மூவார் மக்களுக்கு1 மில்லியன் ரிங்கிட் நிதி திரட்ட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

32 வயதான முன்னாள் இளைஞர், விளையாட்டு அமைச்சர், உள்ளூர் ஃபேஷன் உற்பத்தியாளர் பிரைமா வேலட் முன்வைத்த சவாலை சைட் சாதிக் ஏற்றுக்கொண்டார்.

3.8 கிலோமீட்டர் (கிமீ) நீச்சல், 180 கிமீ சைக்கிள் ஓட்டுதல், 42.2 கிமீ ஓடுதல் ஆகிய மூன்று பிரிவு சவாலை வெற்றிகரமாக முடித்தால், நிறுவனம் ஒரு இலாபகரமான ஊக்கத்தொகையை வழங்கியது.

இந்நிலையில் நேற்று இரவு தனது பேஸ்புக் பக்கத்திலும் டிக்டோக் செயலியிலும் பகிர்ந்த சைட் சாடிக், இந்த சவால் தனிப்பட்ட லாபத்திற்காக அல்ல. மாறாக தனது பகுதியில் உள்ள மக்களுக்கு உதவும் முயற்சி என்று வலியுறுத்தினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset