நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மொஹைதின் மருமகனை நாட்டிற்கு கொண்டு வருவது கடினம்: எம்ஏசிசி

புத்ராஜெயா:

டான்ஸ்ரீ மொஹைதின் மருமகனை நாட்டிற்கு கொண்டு வருவது மிகவும் கடினம் என்பதை எம்ஏசிசி ஒப்புக் கொள்கிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி இதனை கூறினார்.

தப்பியோடிய தொழிலதிபர் டத்தோஸ்ரீ முகமது அட்லான் பெர்ஹான் தொடர்பான குற்றவியல் நம்பிக்கை மோசடி வழக்கு விசாரணையை முடித்துவிட்டதாக எம்ஏசிசி உறுதிப்படுத்தியது.

முன்னாள் பிரதமரின் மருமகன், அவரது வழக்கறிஞர் மன்சூர் சாத் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இந்த நாட்டில் நீதிக்கு கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதே எம்ஏசிசியின் தற்போதைய பணி.

இருப்பினும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட பல காரணிகளால்,

எம்ஏசிசி, போலிஸ் விசாரணைகள் தற்போது இரண்டு சந்தேக நபர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன என்று அவர் கூறினார்.
அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவது நிச்சயமாக கடினம்.

நாங்கள் அவர்களை நீண்ட காலமாக கண்காணித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset