நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கைரி மீண்டும் அம்னோவில் இணைகிறாரா?

கோலாலம்பூர்:

முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அடுத்த மாத இறுதியில் நடைபெறும் சபா மாநிலத் தேர்தலுக்கு முன்பு அம்னோவில் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அம்னோவின் உயர்மட்டத் தலைமையின், குறிப்பாகத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் தலைமையின் கீழ் கட்சிக்குத் திரும்புவதற்கு ஒப்புதல், பெற்றுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெர்லிஸ் அம்னோ தொடர்புத் தலைவர் டத்தோ ரோசாபில் அப்துல் ரஹ்மானின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டபோது, ​ஜாஹித் ஹமிடியும் கைரியும் நேரில் சந்தித்து கைகொடுத்துக் கொண்டனர்.

அப்போது ஜாஹித் தானே கைரியிடம் அம்னோவில் மீண்டும் சேருவதற்கான தனது உறுப்பினர் படிவத்தை அனுப்புமாறு தெரிவித்தார்.

சபா மாநிலத் தேர்தலில் அம்னோ, தேசிய முன்னணி பிரச்சாரங்களுக்கு கைரி உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சி நிறுத்தும் வேட்பாளர்களில் சிலர் அவரது வயது, அரசியல் நண்பர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இது செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset