நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ணத்தை மீண்டும் வெல்ல கடவுள் என்னை அனுமதிப்பார் என நம்புகிறேன்: மெஸ்ஸி

போனஸ் அயர்ஸ்:

இந்தர் மியாமி அணிக்காக கால்பந்து லீக்கில் விளையாடி வரும் அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி 2026ஆம் ஆண்டு பிபா உலகக் கிண்ணத்தை வென்று சாம்பியன் தகுதியைத் தக்க வைக்க கடவுள் தன்னை அனுமதிப்பார் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் 100% உடற்தகுதியுடன் இருந்தால் நாட்டுக்காக மீண்டும் ஒரு உலகக்கோப்பையில் ஆடி வென்று சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கவே ஆவலாக உள்ளேன்.

உண்மை என்னவெனில் நான் உலகக் கிண்ண போட்டியில் அர்ஜெண்டினா அணியை வழிநடத்தவே விரும்புகிறேன்.

உலகக் கிண்ண போட்டியில் ஆடுவது என்பதே ஒரு அசாதாரண அனுபவம்தான். நான் அங்கு இருக்கவே விரும்புகிறேன்.

நான் நல்லபடியாக உடல் தகுதியைப் பாதுகாத்து என் தேசிய அணிக்கு உதவுவதையே விரும்புகிறேன்.

உடல் தகுதியைப் பொறுத்தவரை தினசரி அடிப்படையில்தான் நான் மதிப்பீடு செய்வேன். அடுத்த ஆண்டு பிரீ சீசன் ஆரம்பிக்கிறேன்.
நான் 100% உடல் தகுதியுடன் இருக்கிறேனா என்பதைப் பார்க்க வேண்டும்.

நான் உண்மையில் உலகக் கிண்ண போட்டியில் ஆட ஆவலாக இருக்கிறேன்.

கடந்த உலகக் கிண்ணத்தை வென்றோம் மீண்டும் ஆடி அதைத் தக்கவைப்பது என்பது எனது இலக்கு என்று மெஸ்ஸி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset