நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிபா ஆசியான் கிண்ண கால்பந்து போட்டி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது: எப்ஏஎம்

பெட்டாலிங்ஜெயா:

பிபா ஆசியான் கிண்ண கால்பந்து போட்டி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.

மலேசிய கால்பந்து சங்கத்தின் செயல் தலைவர் டத்தோ முஹம்மத் யூசோப் மஹாடி இதனை விளக்கினார்.

பிபா ஆசியான் கிண்ண போட்டியை ஏற்பாடு செய்வதை, உலக கால்பந்து நிர்வாகக் குழுவின் கீழ் ஆசியான் கால்பந்தின் வளர்ச்சி, ஒருங்கிணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கமாகும்.

பிபா ஆசியான் கிண்ண போட்டியை ஏற்பாடு செய்வது தொடர்பாக பிபா தலைவர் கியானி இன்பான்டினோ வெளியிட்ட அறிவிப்பை எப்ஏஎம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் வரவேற்றதாகவும் அவர் கூறினார்.

இந்த அறிவிப்பு ஆசியான் வட்டார்ச்த்தில் கால்பந்துக்கு மட்டுமல்ல, குறிப்பாக மலேசியாவிற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏனெனில் இது நமது நாட்டில் அறிவிக்கப்பட்டது.

மலேசியா தற்போது ஆசியான் உச்ச நிலை மாநாட்டை நடத்துகிறது.

இந்த மாநாடு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெறுகிறது.

கால்பந்து மூலம் வட்டார ஒற்றுமை, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் மலேசியாவின் பங்கு மற்றும் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சிறந்த குறியீட்டு அர்த்தத்தைக் கொண்டுள்ளது.

அனைத்து உறுப்பு நாடுகள், பிபா தலைமையின் வலுவான ஆதரவுடன், பிபா ஆசியான் கிண்ணத்தை உலக அரங்கில் ஆசியான் கால்பந்தின் எழுச்சியின் அடையாளமாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset