நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசியா, ஆசியான் நாடுகளில் கால்பந்து வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பிரதமரை பிபா தலைவர் சந்தித்தார்

கோலாலம்பூர்:

அனைத்துலக தலைவர்களுடனான தனது அதிகாரப்பூர்வ சந்திப்பின் ஒரு பகுதியாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிபா தலைவர் கியானி இன்பான்டினோ சந்தித்துப் பேசினார்.

உள்ளூர் திறமைகளை வளர்ப்பதற்கும் தேசிய கால்பந்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு ஊக்கியாக இந்த சந்திப்பு அமையும்.

மேலும் பிபா அரங்கத் திட்டம் போன்ற முன்முயற்சிகள் உட்பட, மலேசியா, ஆசியான் வட்டாரத்தின் கால்பந்து சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதங்கள் கவனம் செலுத்தின.

குறிப்பாக ஆசியான், பிபா கால்பந்து மேம்பாட்டு ஒப்பந்தம் குறித்தும் டத்தோஸ்ரீ அன்வாரும் இன்பான்டினோவும் கருத்து தெரிவித்தனர். 

உலகளாவிய கால்பந்தில் வட்டரத்தை ஒரு மரியாதைக்குரிய சக்தியாக நிலைநிறுத்துவதற்கான ஒரு சிறப்பான தொலைநோக்கான நடவடிக்கையாக இது விவரிக்கப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட வசதிகள், கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்கள், பிபாவுடன் மூலோபாய ஒத்துழைப்பு மூலம் மலேசியா கால்பந்து வளர்ச்சிக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset