நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசியா மீதான பிபாவின் தீர்ப்பு மாறாமல் போகலாம்: கியானி இன்பான்டினோவை சந்தித்த துங்கு இஸ்மாயில் கருத்து

கோலாலம்பூர்:

மலேசியா மீதான பிபாவின் தீர்ப்பு மாறாமல் போகலாம் என்று ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் கூறினார்.

ஹரிமாவ் மலாயாவின் 7 வீரர்கள், மலேசிய கால்பந்து சங்கம்  மீது விதிக்கப்பட்ட பிபா தண்டனை குறித்து அவர் தனது கருத்தைத் தெரிவித்தார்.

அதில் 7  வீரர்களான  ஃபாகுண்டோ கார்சஸ், ஹெக்டர் ஹெவெல், ஜான் இராசபால், ரோட்ரிகோ ஹோல்கடோ, இமானோல் மச்சுகா, ஜோவா ஃபிகுயிரெடோ,  கேப்ரியல் பால்மெரோ ஆகியோர் தற்போது பிபாவால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உண்மையில், மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்பட்டதற்காக, உலக கால்பந்து நிர்வாகக் குழு இந்த 7 வீரர்கள், சங்கம் மீது பணமாக அபராதம் விதித்தது.

எனவே மலேசிய கால்பந்து சங்கம், 7 வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் தவிர, பிபாவின் இந்த முடிவு மாறாது. 

எனது கருத்துப்படி, பிபாவின் முடிவு மாறாது, அது மாறினால் அது தண்டனையை உள்ளடக்கியிருக்கலாம் என்று செய்தியாளர் சந்திப்பின் போது துங்கு இஸ்மாயில் பதிலளித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பை தொடர்ந்து  துங்கு மக்கோட்டா இஸ்மாயில் அனைத்துலக கால்பந்து கூட்டமைப்பின்  தலைவர் கியானி இன்பான்டினோவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset