நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிகளில் சிசிடிவி பொருத்துவதற்கு கல்வியமைச்சு 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டு செய்துள்ளது

கோலாலம்பூர்:

பள்ளிகளில் சிசிடிவி பொருத்துவதற்கு  கல்வியமைச்சு 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டு செய்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் மாணவர் ஒழுக்கப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் கல்வியமைச்சு சிசிடிவி கேமராக்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

இதற்காக கூடுதலாக 5 மில்லியன் ரிங்கிட்டை அமைச்சு ஒதுக்கியுள்ளது.

இந்த ஒதுக்கீடு, முன்னர் அறிவிக்கப்பட்ட 3 மில்லியன் ரிங்கிட் சேர்த்து, சிசிடிவி நிறுவலுக்கான மொத்தத் தொகையை 8 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மாணவர் ஒழுக்கப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும்.

மேலும் பல கூடுதல் நடவடிக்கைகளில் இந்த நடவடிக்கையும் ஒன்று என்று கல்வியமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மாணவர்களுக்கு உளவியல் சமூக ஆதரவை வலுப்படுத்துவதற்கும் 500க்கும் மேற்பட்ட வழிகாட்டுதல், ஆலோசனை ஆசிரியர்கள் உட்பட 10,096 புதிய ஆசிரியர்கள் இந்த நவம்பர் மாதம் முதல் நாடு தழுவிய பள்ளிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்று அது அறிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset