நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியான் உச்சி நிலை மாநாடு; டிரம்ப் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசியா வருகிறார்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசியா வருகிறார்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை தெரிவித்தார்.

47ஆவது உச்ச நிலை மாநாடு மலேசியாவில் நடைபெறுகிறது.

இந்த ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்துகொள்ள அவர் மலேசியா வரவுள்ளார்.

அமெரிக்க அதிபரின் வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தின்போது அறிவிக்கப்பட்டது.

டொனால்ட் டிரம்ப் அக்டோபர் 26ஆம் தேதி மலேசியாவுக்கு வருவார் என்பது உண்மைதான்.

ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், வெளியுறவு அமைச்சகம் எங்களுக்குத் தெரிவிக்கும்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான அனைத்துலக ஊடக மையம், அனைத்துலக ஒளிபரப்பு மையத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

முன்னதாக கடந்த நவம்பரில் இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து அமெரிக்க அதிபர் கோலாலம்பூருக்கு முதல் முறையாக மேற்கொள்ளும் பயணம் குறித்த விவரங்களை ஃபஹ்மி விரிவாகக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset