நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய தொழிலாளர்களுக்கு புதிய பயிற்சி தளத்தை மனிதவள அமைச்சு உருவாக்குகிறது: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

மலேசிய தொழிலாளர்களுக்கு புதிய பயிற்சி தளத்தை மனிதவள அமைச்சு உருவாக்குகிறது.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.

அனைத்து சமூகப் பிரிவுகளும் அணுகக்கூடிய ஒரு புதிய தொழில்துறை, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி தளத்தை நிறுவுவதற்காக அமைச்சக அளவிலான ஒரு திட்டத்தை உருவாக்கி வருகிறது.

உள்ளூர், உலகளாவிய பயிற்சி வழங்குநர்களிடமிருந்து சிறந்த திறன் படிப்புகளை இந்த தளம் தொகுத்து ஒருங்கிணைக்கும்.

தொழிலாளர் கல்வி என்பது பணியிடத்தில் கற்றல், நடைமுறை பயன்பாடு,  தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

வேகமான தொழில்துறை மாற்றங்களுக்கு விரைவாக மாற்றியமைக்க பயிற்சித் திட்டங்கள் சுறுசுறுப்பாகவும் நெகிழ்வாகவும் இருக்க வேண்டும்.

தொழில்துறை புரட்சி 4.0 என்பது திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்ட தொழில்நுட்ப, தொழிற்கல்வி, பயிற்சி புரட்சியாக மாற வேண்டும்.

கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் திறன் ஆண்டு 2025 உலகளாவிய திறன்கள் மன்றத்தில் தனது தொடக்க உரையின் போது அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

எச்ஆர்டி கோர்ப்  மூலம் தொழிலாளர் சந்தையில் மலேசியாவின் திறன் மேம்பாடு, மறுதிறன் மேம்பாட்டை வெற்றிகரமாக ஒருங்கிணைத்ததை சிம் எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset