நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரசு நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறது; சபாவின் வளர்ச்சியில் உறுதி கொண்டுள்ளது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

மடானி அரசு நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதுடன் சாபாவின் வளர்ச்சியில் உறுதி கொண்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

சபாவிற்கு மத்திய வருவாயில் 40 சதவீதம் தொடர்பான கோத்தா கினபாலு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாங்கம் மதிக்கிறது.

அதே வேளையில் அதற்கான காரணங்களை ஆராயும். மேலும் ஒட்டுமொத்த நலன்களுக்காக சட்டத்துறை தலைவரின் ஆலோசனையின் பேரில், எந்தவொரு அடுத்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கு முன்பு ஏற்றுக்கொள்ளப்படும் தீர்ப்புக்கான காரணங்கள் ஆராயப்படும்.

முன்னதாக கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் 40 சதவீத உரிமையை நடைமுறைப்படுத்துவதற்காக, கூட்டாட்சி அரசியலமைப்பின் 112வது பிரிவின் கீழ் சபா அரசாங்கத்துடன் கூட்டு மறுஆய்வு நடத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டதாக அவர் கூறினார்.

இந்த முடிவு கூட்டரசு அரசாங்கத்தால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும்.
அதே வேளையில் வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு சபா அரசாங்கத்திற்காகக் காத்திருக்கிறது என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset