நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போக்குவரத்து சம்மன்கள்: அரசு இறுதியாக 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது

கோலாலம்பூர்:

போக்குவரத்து சம்மன்களுக்கு அரசு இறுதியாக 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன், போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூட்டாக இதனை கூறினார்.

2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து புதிய, மிகவும் சீரான விதிமுறைகளை அமல்படுத்தப்படவுள்ளது.

ஆகையால் இந்த ஆண்டு இறுதி வரை போக்குவரத்து அபராதங்களில் 70 சதவீதம் வரை தள்ளுபடியை அரசாங்கம் வழங்குகிறது.

2026 ஜனவரி 1 முதல்  தொடங்கும் "
வேகமாக செலுத்துங்கள், குறைவாக செலுத்துங்கள் என்ற கோஷத்துடன் புதிய கொள்கையை அமல்படுத்தப்பட உள்ளது.

இதற்கு முன்னதாக  மலேசியர்கள் தங்கள் அபராதங்களை செலுத்துவதற்கான ஊக்கமளிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் இந்த ஆண்டு நவம்பர் 1 முதல் டிசம்பர் 30 வரை தள்ளுபடிகள் வழங்கப்படும் என்று இரு அமைச்சர்களும் தெரிவித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset