நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூலிமில் நடந்த பட்டாசு வெடிப்பு விபத்துக்கு சட்டவிரோத வானவேடிக்கைகளே காரணம்: உள்துறை அமைச்சு

புத்ராஜெயா:

கூலிமில் நடந்த பட்டாசு வெடிப்பு விபத்துக்கு சட்டவிரோத வானவேடிக்கைகளே காரணம்.

உள்துறை அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

கெடா கூலிமில் உள்ள பாயா பெசாரில் பட்டாசு வெடிப்பு  விபத்து நடந்தது.

இந்த சம்பவத்திற்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்படாத வாணவேடிக்கை வகையைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் வெடி பொருட்களை எரித்ததால் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு வெடிபொருட்கள் சட்டம் 1957 இன் பிரிவு 8, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

செல்லுபடியாகும் அனுமதியின்றி வெடிபொருட்களை எரித்ததில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் அலட்சியம், சட்டவிரோதமாக வைத்திருத்தல், அனுமதியின்றி வெடிபொருட்களை கையாளுதல் ஆகிய அம்சங்களும் அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset