நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்துக்கள் அல்லாதவர்கள் வீட்டுக்கு சென்றால் காலை உடையுங்கள்: பிரக்யா தாக்குர்

போபால்: 

இந்துக்கள் அல்லாதவர்களின் வீடுகளுக்கு செல்லும் மகள்களின் கால்களை பெற்றோர் உடைக்க வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்குர் சர்ச்சைக்குரிய முறையில் கூறினார்.

போபாலை சேர்ந்த பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்குர் இந்துக்கள் தொடர்பான நிகழ்ச்சியில் பேசுகையில், இந்துக்கள் அல்லாதவர்களின் வீடுகளுக்கு மகள்கள் செல்வதை பெற்றோர் தடுக்க வேண்டும். அவர்கள் கேட்கவில்லை என்றால் அவர்களது கால்களை பெற்றோர் உடைக்க வேண்டும்.

பெற்றோரின் பேச்சைக் கேட்காத பெண்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
வீட்டை விட்டு ஓடிப் போக நினைக்கும் மகள்களை பெற்றோர் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.

அன்பாக எடுத்து சொல்லியோ, அல்லது அடித்தோ, திட்டியோ அவர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என அவர் பேசும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset