நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடாது

கோலாலம்பூர் - 

சரவாக் சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடாது என்று அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் கூறினார்.

சரவாக் சட்டமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து கோவிட்-19 தொற்றின் தாக்கத்தால் அத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தவொரு சூழ்நிலையில் சரவாக் சட்டமன்ற தேர்தலின் வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து வாக்களிப்பு வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மலாக்கா சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மகத்தான வெற்றியை பதிவு செய்தது.

இதனால் சரவாக் தேர்தலில் தேசிய முன்னணி களமிறங்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தேசிய முன்னணி இத்தேர்தலில் போட்டியிடாது. மாறாக ஜிபிஎஸ் கூட்டணிக்கு முழு ஆதரவை தேசிய முன்னணி வழங்கும்.

பிபிபி, பிஆர்எஸ், பிடிபி, எஸ்யூபிபி ஆகிய கட்சிகளை கூட்டணியாக கொண்டது தான் ஜிபிஎஸ்.
ஆகையால் இக்கூட்டணிக்கே தேசிய முன்னணி முழு ஆதரவை வழங்கவுள்ளது என்று முஹம்மத் ஹசான் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset