நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 பட்ஜெட் மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வரவேற்பு

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்  தாக்கல் செய்த 2026 பட்ஜெட் மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டதாகும்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

2026 பட்ஜெட் சமநிலையானதாகவும், ஒழுக்கமானதாகவும், மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.

எஸ்டிஆர், சாரா உதவித் தொகை அதிகரிப்புக்கு அரசாங்கத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவை 2022இல் 600 மில்லியன் ரிங்கிட்டக் ஒப்பிடும்போது தற்போது 1 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளன.

இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறையையும், 

நாட்டின் சமூக பாதுகாப்பு வலையை வலுப்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளையும் இந்த முயற்சி தெளிவாகக் காட்டுகிறது.

இந்திய சமூகத்தின் மீதான அரசாங்கத்தின் கவனம், வீட்டுக் கடன் உத்தரவாதத்தை 1.9 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.

இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார நல்வாழ்வை வலுப்படுத்த மித்ரா, தெக்குன், அமானா இக்தியார் கீழ் 220 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடுட்டுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்

இந்த நடவடிக்கைகள் தொழில்முனைவோர் உணர்வை தொடர்ந்து வலுப்படுத்தவும் சமூகத்தின் பொருளாதார மீள்தன்மையை வளர்க்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.

மேலும் கல்வி, திவேட், தேசிய சேவை பயிற்சித் திட்டம் உட்பட பல திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆக வளர்ந்த, வளமான, நிலையான தேசத்தை நோக்கிய 13ஆவது மலேசியா திட்டத்தின் அபிலாஷைகளுக்கு இணங்க, உள்ளடக்கிய வளர்ச்சி, பகிரப்பட்ட செழிப்பு என்ற நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதை உறுதி செய்வதில் மஇகா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset