நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகாங் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்தார் கோபிந்த் சிங்

கோலாலம்பூர்:

பகாங் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்  நிரந்தரத் தீர்வை வழங்கியுள்ளார்.

இவ்வேளையில் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக இயக்கவியல் அமைச்சர்  கோபிந்த் சிங் கூறினார்.

சரியான கட்டடம் இல்லாமல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலைதில் இந்தப் பள்ளியை கட்டுவதற்கு சிறப்பு மானியம் ஒதுக்கப்பட்டதாக பிரதமர் இன்று 2026 வரவு செலவு திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம் பல ஆண்டுகளாக கொள்கலனின் இயங்கிய இந்தப் பள்ளி எதிர்நோக்கிய துயருக்கு, இந்த வருட தீபாவளி கொண்டாட்டத்துக்கு முன்பதாகவே, ஒளி பிறந்து விட்டதாக அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்ப் பள்ளிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதில் மடானி அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும்மலேசியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நல்ல, ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான சூழலில் படிக்கத் தகுதியானவர்கள் என்பதையும் பிரதிபலிக்கிறது.

அதோடு இந்தப் பள்ளி சிறந்த பள்ளியாக முன்னேறி, நாட்டின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் நல்ல திறன் வாய்ந்த, தெளிந்த சிந்தனை கொண்ட மாணவர்களை உருவாக்கும் என தாம் நம்புவதாக அமைச்சர் கூறினார்.

இதை தவிர இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பல திட்டங்களின் வாயிலாக நிதியை பிரதமர் ஒதுக்கியுள்ளார்.

இத்திட்டம் அனைத்தும் மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset