நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிடிபிடிஎன் வாயிலாக 5,800 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி: பிரதமர்

கோலாலம்பூர்:

பிடிபிடிஎன் வாயிலாக 5800 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்கப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

வசதிக் குறைந்த மாணவர்களின் உயர் கல்வி கனவை நனவாக்க அரசாங்கம் 120 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ்  பிடிபிடிஎன் வாயிலாக 5,800 மாணவர்கள் அரசு பல்கலைக்கழகங்களின இலவசமாக உயர் கல்வி பெறுவார்கள்.

மேலும் ஏழை, கறுப்பு பட்டியலில் உள்ள பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி, மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

மாதத்திற்கு 2,700 ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பிடிபிடிஎன்-ஆல் நிதியளிக்கப்படும் இலவச உயர்கல்விக்கு தகுதியுடையவர்கள் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset