செய்திகள் கலைகள்
கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்
சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் பாண்டு(74) காலமானார்.
கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்டு பாண்டு அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த பாண்டு, ‛‛கரையெல்லாம் செண்பகப்பூ'' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஏற்கனவே இவரது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜும் சினிமாவில் பிரபல நடிகராக இருந்ததால் அவர் மூலம் கிடைத்த வாய்ப்பால் சினிமாவில் நுழைந்தார். அதன்பிறகு தனக்கென நடிப்பில் ஒரு பாணியை உருவாக்கி அசத்தி வந்தார். பாட்டுக்கு நான் அடிமை, சின்னத்தம்பி, இது நம்ம பூமி, தெய்வாக்கு, காதல் கோட்டை உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். முக்கியமாக திமுகவில் இருந்து எம்ஜிஆர்., விலகி அதிமுக., கட்சியை தொடங்கியபோது, அந்தக் கட்சிக்கு கொடியை வடிவமைத்ததும் பாண்டுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
December 22, 2024, 3:30 pm
‘முஃபாசா’ இந்தியாவில் முதல் நாளில் ரூ.12 கோடி வசூலித்துள்ளது
December 21, 2024, 10:41 pm
காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றார்: முதல்வர் ரேவந்த் ரெட்டி
December 19, 2024, 10:07 pm
அழகு ராணி போட்டிகளில் நடக்கும் மோசடித்தனங்கள்: அம்பலப்படுத்தினார் நந்தினி
December 19, 2024, 3:34 pm
ஆஸ்கர் போட்டியிலிருந்து லாபதா லேடீஸ் நீக்கம்
December 18, 2024, 2:57 pm
2025ஆம் ஆண்டு வெளியாகவிருக்கும் முன்னணி தமிழ்த்திரைப்படங்கள்: ரசிகர்கள் உற்சாகம்
December 18, 2024, 12:31 pm
சோழன் திரைப்பட விழா 2024 எதிர்வரும் டிசம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது
December 16, 2024, 10:38 am
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்
December 15, 2024, 9:32 pm
புஷ்பா 2 திரைப்படத்தின் 10-ஆவது நாள் வசூல் ரூ. 1292 கோடியை எட்டியது
December 13, 2024, 4:26 pm